Shobhaa De Slams Mohanlal | ”ஆம்பளையா நடந்துக்கோங்க? மோகன்லால் ஒரு கோழை” கிழித்தெடுத்த ஷோபா
கோழை தனமா பண்ணாதீங்க மோகன்லால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுங்க என்று பிரபல நாவலாசிரியருமான ஷோபா டே கடுமையாக விமர்சித்துள்ளார்.
மலையாள சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து ஒய்வுபெற்ற நீதிபதி கே. ஹேமா தலைமையிலான ஆணையம் அறிக்கை ஒன்றை தயார் செய்தது. 4 ஆண்டுகளுக்கு முன்பே, கேரள அரசிடம் அது சமர்பிக்கப்பட்டது. அதன்படி அந்த அறிக்கையில், சினிமாத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம் பெற்றது.
பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக உடன்பட தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பல பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதனால் மோகன் லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். மோகன்லால் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்துவரும் நிலையில் பல நடிகைகள் பத்திரிக்கையாளர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல நாவலாசிரியரான ஷோபா டே இந்த விவகாரம் குறித்து மோகன் லாலை கடுமையாக விமர்சித்து தனியார் ஊடகத்தில் பேசியுள்ளார்.
ஓட்டுமொத்த மலையாள சினிமாவும் 15-20 ஆண்களின் பிடியில் சிக்கியுள்ளது, இந்த குறிப்பிட்ட வழக்கில் ஹேமா குழு கொடுத்த அறிக்கை 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இது வரை அவர்களுக்கு எந்த நியாமும் கிடைக்கவில்லை. இது மலையாள சினிமாவில் மட்டும் நடக்கும் விஷயமல்ல, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் பாலிவுட் பெங்கால் உள்ளிட்ட அனைத்து திரைத்துறையில் இப்படி நடந்து வருகிறது.
மேலும் மோகன்லால் தலைமையிலான கேரள நடிகர் சங்கத்தினர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த வகையிலும் உதவாது. ஒரு நல்ல தலைவர் என்பவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் அத்துமீறல்கள் ,போன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதாகும். அவ்வாறு அவர் செய்யாமல் பதவி விலகியது கோழை தனமான விஷயமாகும் ஒரு ஆணாக அவர் எழுந்து நின்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதவராக இருந்து இருக்க வேண்டும், அவ்வாறு அவர் செய்யாமல பதவியை ராஜினாமா செய்தது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் ஆண் நடிகர்கள் யாருமே குரல் கொடுக்கவில்லை.
குறிப்பாக பாலிவுட்டை சேர்ந்த யாரும் இது குறித்து பேசாதது தனக்கு அதிர்ச்சி அளிக்கிறது, மலையாள நடிகர்கள் உங்கள் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனாக ஆண் பெண் என்று பிரித்து பார்க்காமல் நியாத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவர் திறைத்துறையினர் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.