Shakthi Vasudevan | வேட்டி அவுந்தது தெரியாது..BATHROOM-ல் கதறி அழுதேன் எமோஷனலான சக்தி
வேட்டி அவுந்தது கூட தெரியாத நிலையில் பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் இருந்த நிலை.. தற்போது இவருக்கா இந்த நிலைமை இப்படி முகமே மாறிடுச்சே என்று அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகர் சக்தி வாசுதேவன்.
பல முன்னனி நடிகர்களை இயக்கி மாபெரும் பெற்ற படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் வாசுவின் மகன் சக்தி வாசுதேவன். இவர் குழந்தை நட்சத்திரமாக தனது தந்தை படங்களில் நடித்து பிறகு தமிழில் தொட்டால் பூ மலரும், நினைதலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். சரிவர பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் ஒரு வில்லனாக தோன்ற ஆரம்பித்தார். இதனால் சில ஆண்டுகள் வெளியே வராமல் இருந்தார். அதன்பின் மது அருந்திவிட்டு காரை விபத்துக்குள்ளாக்கிய புகாரில் சிக்கி சில ஆண்டுகள் அப்படியே காணாமல் போனார்.
இந்தநிலையில் தன் அப்பா பி வாசுவுடன் சேர்ந்து நேர்காணல் ஒன்றில் மணம் திறந்து பேசியுள்ளார். நான் என் சின்ன வயசுலிருந்தே எதிலுமே நான் ஃபெயில் ஆனது கிடையாது. நான் நன்றாக எம்பிஏ வரை படித்தேன். ஆனால், இந்த சினிமா துறைக்கு வந்த பிறகு பல தோல்விகளை கண்டேன். பிக் பாஸ் நிகழ்சிக்கு சென்றது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. என் அப்பா அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ தடுத்தார்..பல விதங்களில் சொல்லி பார்த்தார். ஆனால் நான் தான் விடாபிடியாகப் போனேன். பிக்பாஸ் பார்த்ததே இல்லை, அதோட பின் விளைவுகள் தெரியாமல் போய்டேன். அது தான் என் வாழ்கையிலேயே எடுத்த தவறான முடிவு. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு சில பிரச்சினைகளால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.
அதன்பின் மது அருந்திவிட்டு காரை விபத்துக்குள்ளாக்கிய புகாரில் சிக்கி சில ஆண்டுகள் அப்படியே காணாமல் போனார். இதுக்குறித்து அவர் தெரிவித்தாவது, நான் பணத்திமிரில் குடிக்கவில்லை, என் சந்தர்ப்ப சூழ்நிலை, பிரச்சனைக்காகக் குடித்தேன். அது என்ன பிரச்சனை என்று என் குடும்பத்திற்கு தெரியும், கடவுளுக்கு தெரியும்.
அப்போது நடிகர் ரஜினி என் அப்பாவிற்கு போன் செய்து என்னை பற்றி விசாரித்தார். என்னிடம் மீண்டும் சினிமாவிற்கு வரும் படி கேட்டு கொண்டார். இந்த சறுக்கல் எல்லா நடிகர்களின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது, என் வாழ்க்கையிலும் நடந்தது. அவர் என்னை அழைத்து பேசவேண்டிய அவசியம் இல்லை, அவர் ஆறுதல் கூறினார் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.