Shah Rukh Khan hospitalized | ஷாருக்கானின் தற்போதைய நிலை?தீவிர சிகிச்சை! மருத்துவர் சொல்வது என்ன?

Continues below advertisement

ஷாருக்கானின் தற்போதைய நிலை?தீவிர சிகிச்சை! மருத்துவர் சொல்வது என்ன?

 

பாலிவுட் உலகின் பாஷாவாக விளங்கும் பிரபல நடிகர் ஷாருக்கான் இப்பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அவரின் தற்போதிய நிலை தெரியாமல் ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.

நடிகர் ஷாருக் கான் பாலிவுட்டில் டாப் ஹீரோவாக இருப்பவர். தொடர்ந்து 1000 கோடி வசூல் ஈட்டும் படங்களாக கொடுத்து பாலிவுட் பிஸினஸை தூக்கி நிறுத்தியவர் அவர். கொரோனா காலத்திற்கு பிறகு சரிவில் இருந்த பாலிவுட் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஷாருக் கானும் முக்கிய காரணம்.

இவர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். நேற்று அகமதாபாத்தில் நடந்த குவாலிபயர் 1 சுற்றில் கொல்கத்தா அணியும் ஐதராபாத் அணியும் மோதின. இதில் கொல்கத்தா வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில், நடிகர் ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில் ஷாருக்கான் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தின் கேடி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram