சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம் | Sangeetha Kirsh Divorce
நடிகை சங்கீதா தனது காதல் கணவர் பாடகர் கிர்ஷை விட்டு பிரிய இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சங்கீதா பின்னணி பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்கும் சங்கீதா பிசியான நடிகையாக மாறியிருக்கிறார். சக நடிகைகளை சந்தித்து பேசுவது, பார்ட்டி என ஜாலியாக இருக்கும் சங்கீதா காதல் கணவர் கிரிஷ்ஷை விட்டு தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருவரும் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆனாலும், தமிழில் கபடி கபடி, டபுள்ஸ், உதவிக்கு வரலாமா, காதலே நிம்மதி, பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் சங்கீதா நடித்திருக்கிறார். படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பின்னணி பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக சங்கீதா வலம் வந்தார். திருமணத்தில் கிரஷ்ஷை விட சங்கீதாவிற்கு அதிக வயது என செய்திகள் பரவியது. ஆனால், சமீபத்தில் சங்கீதா அளித்த பேட்டியில் என்னை விட கிரஷ்ஷிற்கு வயது அதிகம் என தெரிவித்தார். அதே பேட்டியில் தமிழை விட தெலுங்கு திரையுலகம் தான் பிடித்திருக்கிறது. அங்கு தான் எனக்கான மரியாதையும், திறமையும் அங்கீகரிக்கப்பட்டது எனக் கூறியிருந்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்நாட்டில் ஏன் வாழ்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் பலர் விமர்சித்தனர்.
இந்நிலையில், நடிகை சங்கீதாவும் கிரிஷ்ஷூம் விவாகரத்து பெற இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இவருக்கும் கிரஷ்ஷூக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சங்கீதா கிரஷ் என்ற தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை Sangeetha Act என மாற்றியிருக்கிறார். இதனால், சங்கீதா கணவரை விட்டு பிரிய இருப்பதாகவும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அவர் கிரஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கவில்லை. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, சமூகவலைதளங்களில் சங்கீதா குறித்த செய்தி அதிகம் உலா வருகிறது.