NagaChaitanya vs Samantha | அதே நாள்..அதே இடம்!சமந்தாவை சீண்டும் சைதன்யா? infinite love-ஆ?

Continues below advertisement

நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவும் டேட் பண்ணிட்டு வரதாவும் கூடிய சீக்கிரம் இவங்க கல்யாணம் செஞ்சுக்க போறதாகவும் ரொம்ப நாளாவே காசிப் இருந்து வந்த நிலையில, இன்னைக்கு நாகசைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சுருக்கு.. இதுல இண்ட்ரஸ்டிங்கான விஷயம் என்னன்னா சமந்தா நாக சைதன்யா கிட்ட ப்ரொபோஸ் பண்ண அதே நாள்ல இந்த நிச்சயம் நடந்திருக்கு..அதுவும் சமந்தா நாகசைதன்யா திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே இடத்தில இவங்களோட திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கு..

கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தாவும் நாக சைதன்யாவும் காதல் திருமணம் செஞ்சுகிட்டாங்க.. ரொம்பவே க்ராண்டா நடைபெற்ற இவங்களோட திருமண வாழ்க்கை ரொம்ப நாள் நீடிக்கல..2021 ல் இந்த தம்பதி விவாகரத்து செய்து மண வாழ்க்கைல இருந்து விலகிட்டாங்க. இவங்களோட பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவங்க ரெண்டு பேரும் அதபத்தி வெளிப்படையா எங்கயுமே பேசல

இதைத்தொடர்ந்து சமந்தா அவங்களோட கேரியர் மற்றும் ஹெல்த்ல கான்செண்ட்ரேட் பண்ணி வர நிலையில, நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவ டேட் பண்றதா தகவல் வெளியாச்சு. அதே நேரத்தில் இந்த உறவு தான் சமந்தா நாகசைதன்யாவோட பிரிவுக்கு காரணம்னும் ரூமர்ஸ் வெளியானது..

சமீப காலமா சைதன்யா சோபிதாவோட புகைப்படங்களும் நிறைய வெளியாகி இவங்களோட காதலையும் உறுதி செஞ்சுச்சு.. கூடிய விரைவில இந்த தம்பதி திருமணம் செஞ்சுக்க போறதாவும் தகவல் வெளியாச்சு. இந்நிலையில் ஆகஸ்ட் 8 அதாவது இன்னைக்கு
 நாக சைதன்யாவோட இல்லத்தில சோபிதா நாக சைதன்யாவோட நிச்சயதார்த்தம் நடைப்பெற்றிருக்கு. இதே ஆகஸ்ட் 8 அன்னைக்கு தான் சமந்தா சைதன்யாவுக்கு ப்ரொபோஸ் பண்ணாங்களாம்.

இந்நிலையில நாக சைதன்யாவோட அப்பா நாகார்ஜுனா புகைப்படத்துடன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.சோபிதா துலிபாலாவை எங்கள் குடும்பத்தில் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். அப்படினு பதிவிட்டு நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டிருக்காரு நாகர்ஜுனா

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram