GV Prakash Saindhavi Divorce : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவி

Continues below advertisement

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி (Saindhavi - G V Prakash) ஆகிய இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்ள இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஜி.வி பிரகாஷ் குறித்து பல்வேறு அவதூறுத் தகவல்கள் பரவி வந்தன. 

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் எந்த விதமான ஆதராமும் இல்லாமல் இருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து தெரிவிப்பது புன்படுத்தும் விதமாக இருப்பதாக பதிவிட்டார். ஜி.வி பிரகாஷைத் தொடர்ந்து தற்போது பாடகி சைந்தவி தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்

 

இந்தப் பதிவில் அவர் “ எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மரியாதை அளிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொண்ட பிறகும் யூடியுப் சானல்கள் பல தவறான கருத்துக்களை பரப்புவது மன வருத்தம் அளிக்கிறது.  எங்கள் விவாகரத்துக்கு எந்த விதமான வெளியாட்களும் காரணமில்லை. ஆதாரமில்லாமல் ஒருவரது கேரக்டரை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எங்கள் இருவரின் நலனுக்காக இது நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. எங்கள் பள்ளி காலத்தில் இருந்து நானும் ஜி.வி பிரகாஷும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வருகிறோம். இனிமேலும் எங்களின் இந்த நட்பு தொடரவே செய்யும்” என்று அவர் கூறியுள்ளார் 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram