Ramoji Rao Passed Away | பாகுபலியின் அடையாளம்..ராமோஜி ராவ் மறைவு! 1936 - 2024
ஈடிவி நெட்வொர்க் மற்றும் ராமோஜி பிலிம் சிட்டியின் தலைவரான ராமோஜி ராவ், உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணரல் காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகத்துறையின் மிகப்பெரிய ஆளூமையாக இருந்து வந்த ராமோஜி ராவ், 1936 ஆம் ஆண்டு பிறந்தார். ராமோஜி ராவ் உலகின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ராமோஜி பிலிம் சிட்டியை வைத்திருக்கும் ராமோஜி குழுமத்தின் தலைவராவார். ஈ நாடு என்ற பிரபல தெலுங்கு நாளிதழின் தலைவரும் ஆவார். 1980 களில் ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியின் வளர்ச்சிக்கு ஈ நாடு பெரும் பங்கு வகித்தது.
அவர் சுமார் 50 படங்கள் மற்றும் டெலிஃபிலிம்களைத் தயாரித்தார்.2016 ஆம் ஆண்டில், பத்திரிகை, இலக்கியம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.அவர் தேசிய விருது மற்றும் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றார்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மற்றும் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பல பிரபல அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்களுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டார்.
87 வயதான இவர் கடந்த ஜுன் 5 தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.