Rajinikanth : என்கவுன்டர் குறித்த கேள்வி..ESCAPE ஆன ரஜினி!

அனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது தனது நடனம் குறித்து மனம்திறந்துள்ளார் ரஜினிகாந்த். 

ரஜினி  தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கூலி  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற அம்பானி மகன் அனந்த அம்பானியில் திருமண விழாவில் மனைவி லதா மற்றும் மகள் சௌந்தர்யாவின் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினிகாந்தி குஷியாக நடனமாடிய வீடியோ வெளியாகி  இணையத்தையே அதிர வைத்தது.

காரணம் இதற்கு முன் ரஜினி எந்த ஒரு பொது நிகழச்சியிலும் இவ்வளவு சகஜமாக அதுவும் நடனமாடியதே இல்லை. இந்நிலையில் மும்பையில் இருந்து இன்று ரஜினி சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்:

அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது அதில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.  நாளை கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தை பார்க்க உள்ளேன். தமிழகத்தில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்து கேட்டபோது நோ கமெண்ட்ஸ் எனக் கூறி விட்டு சென்றார்.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola