என் தலைவனுக்காக.. வீடு கட்டிய ரசிகர்! நேரில் போன ரஜினி மகள்

Continues below advertisement

மதுரையில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தான் கட்டிய புது வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் என பெயரிட்டதோடு வீட்டிலேயே ரஜினிக்கு மெழுகு சிலை வைத்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரை நேரில் சந்தித்த ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா வாழ்த்து தெரிவித்து அவரது கையில் வீட்டு சாவியை வழங்கியுள்ளார்.


திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கோல்டன் சரவணன. இவர் தனது சொந்த முயற்சியில் பல ஆண்டு கணவான சொந்த வீட்டை கட்டி முடித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறம் 1300 சதுர அடியில் 1மாடி கட்டிடம் கட்டி இந்த வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் என்ற பெயர் வைத்துள்ளார். மேலும் வீட்டின் முன்புறம் ரஜினி புகைப்படம் வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்ததோடு வீட்டின் உள்ளே நடிகர் ரஜினியின் மார்பளவு மெழுகு சிலை வைத்து கோவில் போல் அமைத்துள்ளார். இந்த வீட்டிற்கு வரும் 23 ஆம் தேதி வீட்டின் கிரகப்பிரவேசம் வைத்திருக்கிறார். இந்த கிரகப்பிரவேசத்தில் ரஜினியின் அண்ணன்  சத்தியநாராயணன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இன்று மதுரைக்கு வந்திருந்து தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த ரஜினியின் இளைய மகன் சௌந்தர்யா ரஜினிகாந்த் கோல்டன் சரவணனை அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு அவர் கட்டி வரும் புதுமனையின் சாவியை அவருக்கு வழங்கினார். அப்போது அவருடன் அவரது கணவர் விசாகன் வணங்காமுடி உடன் இருந்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola