Cheran Fight with bus Driver | சேரன் செய்த சம்பவம்..ஆதாரமான CCTV காட்சி..நடுரோட்டில் நடந்தது என்ன?

Continues below advertisement

இயக்குனர் சேரன் மீது கடலூர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பேருந்தில் பதிவான சிசிடிவி காட்சிகளுடன் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். காரை நிறுத்தி இடையூறு செய்ததாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர் பேருந்து ஓட்டுணரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் பின்னணி என்ன

இரு தினங்களுக்கு முன்பு கடலூர் -புதுச்சேரி சாலையில் இயக்குனர் சேரன் தனியார் பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பேருந்து தொடர்ந்து ஹாரன் அடித்து வந்ததால் தனது காரை நடுநோட்டில் நிறுத்தி ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். 2 நிமிடம் வரை இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில் கடலூர் புதுச்சேரி சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதன் காரணமாக கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் ஒவ்வொரு பேருந்துக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்தநிலையில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடலூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பயணிகளுடன் வந்த பேருந்தை இயக்குனர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு. சேரன் காவல் துறையிலோ, போக்குவரத்து துறையிலோ புகார் அளித்திருக்க வேண்டும். தானாக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தனியார் பேருந்துகளில் தற்பொழுது பயன்படுத்தப்படுவது ஏர்  ஹாரன் கிடையாது எலக்ட்ரிக் ஹாரன் தான். எனவே பேருந்துகள் மீது அபராதம் விதிப்பதை காவல்துறையினர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை கடலூர் மாவட்ட காவல்துறைக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வழங்கியுள்ளது.

மேலும் பேருந்தில் பதிவான இரண்டு சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒப்படைத்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram