எனக்கு வேலை வெட்டி இல்லையா?முதலும் கடைசியா இருக்கட்டும்!டென்ஷனான பிரேமலதா

Continues below advertisement

ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தில் வெறும் 500 பேர் வந்துள்ளீர்கள்..கேட்டால் திங்கள் கிழமை வேலை நாளாம்.. நாங்க என்ன வேலையில்லாமல் வந்திருக்கிறோமா?  அழைப்பிதழில் பெயர் இல்லை என்றால் மட்டும் எவ்வளவு கோபப்படுறீங்க? இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிர்வாகிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 1000 நிர்வாகிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 500 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரேமலதா மேடையில் பேசும்போதே நிர்வாகிகளை திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்து தொண்டர்கள் வேதனையுடன் பேசிக் கொண்டே செல்லும் பொழுது கடந்த வாரத்தில் இதேபோல் பூத் ஆலோசனை கமிட்டி கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். தவிர்க்க இயலாத காரணத்தால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. திங்கட்கிழமை அன்று மீண்டும் அந்த கூட்டத்தை நடத்துவதற்காக அழைத்தனர். வாரத்தின் முதல் நாளை விவசாய பணிக்கு செல்லாமல் வந்தால் மறுநாள் பணி தர மாட்டார்கள். இருப்பினும் பலரும் அதை சமாளித்து தான் இங்கு வந்தோம் இருப்பினும் அண்ணியார் இப்படி பேசியது மனதிற்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றபடி கூறி சென்றனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola