நள்ளிரவில் நடந்த சண்டை பெண்களை இழிவுபடுத்திய பிரவீன் பதிலடி கொடுத்த நந்தினி Bigg Boss

Continues below advertisement

பிக்பாஸ் 9 தமிழ் நிகழ்ச்சியில் பெண்களைப் பெற்றி பொதுப்படையாக கருதுத் தெரிவித்ததற்காக இயக்குநர் பிரவீன் காந்தி சர்ச்சையையில் சிக்கியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் நேற்று அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துவங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் இந்த ஆண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள். 

முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையில் மோதல்கள் தொடங்கியுள்ளன. குறட்டை விட்டதால் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் பிற போட்டியாளர்கள் இடையில் வாக்குவாதம் பெரிதாகியுள்ளது. மேலும் இயக்குநர் பிரவீன் காந்தி பெண்களைப் பற்றி பொதுப்படையான கருத்தை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். விக்ரம் , துஷார் மற்றும் நந்தினியுடன் பேசிய பிரவீன் காந்தி " பெண்களால் தன்னை விட அழகான இன்னொரு பெண் வந்துவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த அழகை தூக்கி சாப்பிட என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசிப்பார்கள். அது பெண்களின் படைப்பு. கடவுள் படைப்பிலேயே பெண்களிடம் இரண்டு விஷயங்களை கொடுத்துவிட்டார். 

ஒன்று பொறாமை இன்னொன்று பேராசை. இந்த இரண்டை பெண்களிடம் இருந்து நான் எடுக்கவே முடியாது என பிரவீன் காந்தி பேசினார். இதை கேட்ட நந்தினி எல்லா மனிதர்களுக்கும் பொறாமை உணர்வு இருக்கதான் செய்கிறது பெண்களுக்கு மட்டும் இப்படி என்று பொதுப்படையாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola