PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT

Continues below advertisement

ஜனநாயகன் திரைப்பட சென்சார் போர்டு பிரச்னையில் தொடர்ச்சியாக அரசுக்கெதிராக குரல் கொடுத்துவரும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ட்ரம்ப் மண் அல்ல இது காந்தியின் மண் என்று கூறியிருக்கிறார்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவான `ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் போர்டுடனான பிரச்னை காரணமாக பட ரிலீஸை தேதி குறிப்பிடும் படக்குழு ஒத்தி வைத்தது. முதலில் இந்த விவகாரத்தில் சென்சார் போர்டுக்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி படத்துக்கு உடனடியாக யு.ஏ சான்றிதழ் வழங்குமாறு சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டது. ஆனால், சென்சார் போர்டு இதில் மேல்முறையீடு செய்து தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை வாங்கியது. மேலும், வழக்கு விசாரணையும் ஜனவரி 21-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. மறுபக்கம், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சென்சார் போர்டு மற்றும் மத்திய அரசுக்கெதிராக குரல்கொடுத்தன. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், ``சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறிவிட்டது" என்று ட்வீட் போட்டார். இவ்வாறிருக்க, படம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரி படக்குழு தாக்கல் செய்த கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ``இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை. வழக்கை ஜனவரி 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கும்" என்று உச்ச நீதிமன்றம் திட்ட வட்டமாகக் கூறிவிட்டது. இந்த நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் மத்திய அரசின் செயல் அவமானகராமானது என்று கூறிய ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இது படத்தைப் பற்றியது அல்ல, அரசின் அதிகார துஷ்பிரயோகம் பற்றியது என்று தெரிவித்திருக்கிறார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பி.சி. ஸ்ரீராம், ``ஜானநாயகன் படத்தைப் பற்றிய எனது ட்வீட்கள் ஒரு படத்தைப் பற்றியது மட்டுமல்ல. மாறாக, மாநில அல்லது மத்திய அரசாக இருந்தாலும் ஜனநாயகத்தை எல்லா வகையிலும் அச்சுறுத்தும் அரசு அமைப்புகளின் அதிகார துஷ்பிரயோகம் பற்றியது. இது காந்தியின் மண், ட்ரம்பின் மண் அல்ல" என்று பதிவிட்டிருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola