Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

த்ரிஷா கடுமையாக திட்டியதும் பெண்ணே ஆகப்பெரும் சக்தி என வருத்தம் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபனிடம் திரைப்பிரலங்கள் சிலரின் ஃபோட்டோக்களை காட்டி அவர்களை பற்றி பேச சொல்லியிருந்தனர். அப்போது த்ரிஷாவை காட்டியதும்  “குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.  நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருப்பதற்காக சொல்கிறேன். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்”என சொல்லியிருந்தார்.

இதனால் கோபப்பட்ட த்ரிஷா பார்த்திபனை கடுமையாக திட்டி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டிருந்தார். அதில் ”ஒரு நபர் தனது உதவியாளர் மூலம் தெரிவித்த வேண்டுகோளின் பேரில் எனது பெயரும் படமும் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள். கையில் மைக் இருப்பதால் மட்டும் ஒருவருடைய கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை தான் சத்தமாக வெளிப்படுத்துகிறது. அறிவு இல்லாமல் பேசப்படும் அநாகரிகமான வார்த்தைகள். அவை யாரை பற்றி பேசப்படுகிறதோ அதைவிட பேசுபவரின் தரத்தையே அதிகம் வெளிப்படுத்துகின்றன” என பதிலடி கொடுத்தார்.

இந்தநிலையில் எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது பெண்ணே ஆகப்பெரும் சக்தி என சொல்லி மன்னிப்பு கேட்டுள்ளார் பார்த்திபன்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola