Paresh Rawal ’’15 நாட்கள் சிறுநீர் குடித்தேன் இயக்குநர் தான் குடிக்க சொன்னார்’’ -சூரரைபோற்று வில்லன் | Soorarai Pottru | Ajay Devgn | Veeru Devgn

காலில் ஏற்பட்ட காயம் குணமாக நான் என்னுடைய சிறுநீரை 15 நாட்கள் குடித்தேன் என்று சூரரைப் போற்று திரைப்பட வில்லன் பரேஸ் ராவல் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்த பரேஸ் ராவல் கிட்டத்தட்ட 240க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர்,  15 நாட்கள் தனது சிறுநீரை குடித்ததாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதற்கான காரணத்தையும் அவர் தற்போது கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுதியது மட்டுமில்லாமல் முகம் சுழிக்கவும் செய்துள்ளது.

இது குறித்து பரேஸ் ராவல் கூறியிருப்பதாவது ஹிந்தி படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இவரது காலில் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரை பரிசோதித்த மருத்துவர்கள், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரின் காயங்கள் குணமடைய 3 மாதம் வரை ஆகும் என கூறியுள்ளனர்.

அந்த சமயத்தில் தான், நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை,  வீரு தேவ்கன் இவரை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். தன்னுடைய திரையுலக வாழ்க்கையே முடிந்து விட்டது என்கிற சோகத்தில் இருந்த பரேஸ் ராவலிடம், வீரு தேவ்கன், உங்கள் காலில் உள்ள காயம் சரியாக... 15 நாட்கள், காலையில் உங்களுடைய சிறுநீரை அருந்தவேண்டும் என கூறியுள்ளார்.

அதே சமயம்,  இதை பீர் போல ரசித்து ருசித்து குடிக்க வேண்டும் என கூறினாராம்.  சிறுநீரகத்தை மருந்தாக எடுத்து கொள்ளும் போது, சரக்கு, புகை, ஆட்டு இறைச்சி போன்ற சிலவற்றை தவிர்க்குமாறு கூறியுள்ளார். அதே போல் உரிய நேரத்தில் சாப்பாடு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அவர் சொன்னபடி, அனைத்தையும் பின்பற்றி....  என்னுடைய சிறுநீரை 15 நாட்கள் நான் குடித்தேன். 

15 நாட்களுக்கு பிறகு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது மருத்துவர்களுக்கே ஆச்சர்யம். எனக்கு காலில் ஏற்பட்டிருந்த காயம் முற்றிலுமாக குணமாகியிருந்தது.  எப்படியும் அந்த காயம் சரியாக கிட்டத்தட்ட இரண்டரை மாதம் வரை ஆகும் என்றார்கள். ஆனால், என்னுடைய காயம் ஒன்றரை மாதத்திலேயே சரியாகிவிட்டது என்று கூறினார்கள். அதற்கு நான் சிறுநீரை அருந்தியது தான் காரணம் என்பது போல் கூறி பரேஸ் ராவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola