P Suseela latest video : ”நான் நல்லா இருக்கேன்எல்லாருக்கும் நன்றி” வீடியோ வெளியிட்ட பி.சுசீலா
பிரபல பிண்ணனி பாடகியான பி.சிசீலா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தான் நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
பழம்பெரும் பிண்ணனி பாடகியான பி.சிசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் சிறந்த பிண்ணனி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார்.
வயது மூப்பின் காரணமாக திரைப்படங்களில் பாடுவதை தவிர்த்து வரும் பி. சுசீலா, கடந்த ஜுன் மாதம், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் முடிகாணிக்கை செலுத்தினார்.
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி. சுசீலா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பி.சுசீலாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் உடல் நிலை குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி பாடகி பி.சுசிலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள்ளார்.