Hospitalized P Suseela : தீவிர சிகிச்சையில் பி.சுசீலா..தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை REPORT!

பிரபல பிண்ணனி பாடகியான பி.சிசீலா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பழம்பெரும் பிண்ணனி பாடகியான பி.சிசீலா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் சிறந்த பிண்ணனி பாடகிக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். 

மனதை கட்டிப்போடும் குரலை கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டவர் பி. சுசீலா. உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற "பால் போலவே" என்ற பாடலுக்காக முதன் முறையாக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பெற்றார்.

வயது மூப்பின் காரணமாக திரைப்படங்களில் பாடுவதை தவிர்த்து வரும் பி. சுசீலா, கடந்த ஜுன் மாதம், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் முடிகாணிக்கை செலுத்தினார்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி. சுசீலா அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவிர காண்காப்பில் இருந்து வரும் பி.சுசீலாவின்  உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola