Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ரீமேக்கா இல்லையா என்பது குறித்து அப்படத்தின் இயக்குநரே சீக்ரெட்டை உடைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமான நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில் தனது திரைவாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9 வெளியாக உள்ளது. இந்த பட்த்தை இயக்குநர் ஹச்.வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் பகவந்த கேசரி என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் என்ற தகவல்கள் தீயாய் பரவின. குறிப்பாக சில தினங்களுக்கு முன் ஜனநாயகன் இரண்டாவது சிங்கிளான கண்ணே மணியே என்ற பாடல் வெளியானது. அதில் விஜய் ஒரு குழந்தையுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடலையும் பகவந்த் கேசரி திரைப்பட காட்சிகளையும் ஒப்பிட்டு ஃபேன்ஸ் சமூக வலைதளங்கள் முழுக்க விவாதித்து வந்தனர். மமிதா பைஜு தான் அந்த குழந்தை என்றெல்லாம் ஃபேன்ஸ் தற்போதே கெஸ் செய்யத் தொடங்கினர். எனினும் மலேசியாவில் நடைபெற்ற ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் இயக்குநர் ஹச் வினோத் ஜனநாயகன் ரீமேக்கா அப்படி இப்படி எல்லாம் பேசி வருகின்றனர். கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும் உள்ள புகுந்து ஆட்டைய கழச்சிடலாம்னு நினைச்சிட்டு இருக்காங்க..ஐயா இது தளபதி படம் 100 பெர்சண்ட் எண்டர்டெயின்மெண்ட் கன்ஃபார்ம்..என பேசியிருந்தார்.
இந்நிலையில் வரும் பொங்கலுக்கு இயக்குநர் பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடியின் மற்றொரு திரைப்படம் திரைக்கு வருகிறது. அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் "'ஜனநாயகன்' படம் 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்கா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் அனில் ரவிபுடி, "விஜய் சார் ஒரு ஜென்டில்மேன்.அவருடைய ஃபேர்வெல் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா இல்லையா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்.அதுவரை இதை தளபதி விஜய் படமாகவே கருதுவோம்." எனக் கூறியிருக்கிறார்.