Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?

Continues below advertisement

தனுஷை அட்டாக் செய்து நயந்தாரா வெளியிட்ட ஓபன் லெட்டர் ஒருவித ப்ரொமோஷன் ஸ்ட்ராடெஜி தான் என சினிமா விமர்சகர் பிஸ்மி விமர்சித்துள்ளார்

நானும் ரவுடி தான் திரைப்பட விசுவல்ஸை தனது கல்யாண வீடியோவான் நெட்பிலிக்ஸ் டாக்குமெண்டரியில் பயன்படுத்த அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் மறுப்பு தெரிவித்ததால் தனுஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அந்த டாக்குமெண்டரியின் ட்ரெய்லரில் நானும் ரவுடி தான் படத்தின் பிடிஎஸ் விசுவல்ஸ் வெறும் 3 செகண்ட் இடம்பெற்றதற்கு தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் நயந்தாரா குறிப்பிட்டிருந்தார்.நயன் தாராவின் டேரக்ட் அட்டாக் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. 

மேலும் தனுஷுடன் நடித்த சக நடிகைகள் நஸ்ரியா, பார்வதி நாயர், ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நயந்தாராவின் போஸ்ட்க்கு லைக் செய்து தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனுஷுடன் நெருங்கி பழகிய சிவகார்த்திகேயன், அனிருத், நயந்தாரா உட்பட பல நடிகர் நடிகைகள் தற்போது அவருடன் கருத்து வேறுபாடில் இருந்து வருவதால் ரசிகர்களின் ஒட்டுமொத்த ச்ப்போர்ட்டும் நயன் பக்கம் திரும்பியது. இன்ஸ்டாகிராம் முழுக்க நயந்தாராவுக்கு சப்போர்டும் தனுஷுக்கு ஹேட்டும் பரவிய நிலையில், ஒரு சாரார் தனுஷ் பக்கம் நியாயம் இருப்பதாக பதிவிட்டனர். படத்தின் தயாரிப்பாளர் என்ற உரிமையில் அவர் கோருவது சரிதான். மேலும் நயந்தாராவும் அந்த விசுவலை நெட்பிலிக்ஸுக்கு வித்து லாபம் தானே பார்க்கப்போகிறார் என பதிவிட்டு வருகின்றனர். இப்படி தனுஷ் நயன் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், சினிமா விமர்சகர் பிஸ்மி இதுகுறித்து சில தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர், நயந்தாரா செய்வது நியாமமே இல்லை..நானும் ரவுடி தான் திரைப்படத்தை வெறும் நட்பு அடிப்படையில் மட்டுமே தனுஷ் தயாரிக்க ஒப்புக்கொண்டார். முதலில் 6 கோடி என அப்படத்தின் பட்ஜெட் பேசப்பட்டது. பின்னது படப்பிடிப்பின் போது நயந்தாரா விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர, பல சீன்களை ரீசூட் செய்து படத்தின் பட்ஜெட் 16 கோடியாக மாற பின்னர் ரிலீஸிக்குள் மொத்தமாக 25 கோடி வரை அவர்கள் தனுஷுக்கு செலவிழுத்து விட்டனர். விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி என அனைவருமே அப்போ டாப்பில் இல்லை அதனால் படத்தை விற்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. நல்லவேளையாக படம் ஓடியதால் தனுஷ் பெரிய அடியில் இருந்து தப்பித்தார். இல்லையென்றால் அவ்ளோதான்.

இந்த காரனங்களுக்காக படப்பிடிப்பின் போதே விக்னேஷ் சிவன் தனுஷ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், விக்னேஷ் சிவன்காக நயனும் தனுஷிடம் வன்மத்தை காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் மீதுள்ள கோபத்தை ஏன் இப்போது நயந்தாரா வெளிப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழும். அது முழுக்க முழுக்க வணிக நோக்கம் தான். அவரது டாக்குமெண்டரி 18 ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் அதற்கு மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு இருப்பதாக தெரியவில்லை. அதனால் தான் இந்த நேரத்தில் இப்படி ஒரு காரியத்தை செய்தால் அதற்கு ப்ரொமோஷனாக மாறிவிடும் என்ற நோக்கத்தில் தான் நயன் இப்படி செய்துள்ளதாக பிஸ்மி கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram