AR Rahman Meet Ilaiyaraaja: இசைப்புயலை சந்தித்த இசைஞானி.. ஏ.ஆர் ரஹ்மான் கொடுத்த ஹிண்ட்!
ABP NADU
Updated at:
07 Mar 2022 03:21 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppAR Rahman Meet Ilaiyaraaja: துபாய் எக்ஸ்போ 2020 பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்து முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் பல முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், பெண் இசைக்கலைஞர்களை கொண்டு ஃபிர்டோஸ் ஸ்டுடியோ என்ற இசை குழுவை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த குழுவோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்தினார். துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவும் நிகழ்ச்சி நடத்தினார். இந்நிலையில், துபாயில் இருக்கும் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மானின் ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார்.