Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?

”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன? நடிகை தற்போது வீடியோ ஒன்றை அழுது கொண்டு வெளியிட்டு உள்ளார்.

கிளாமர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம். அப்படி பல ஆண்டுகளாக ரசிகர்களை தன் கைப்பிடிக்குள் அடக்கி வைத்து இருந்த நடிகை மும்தாஜ். சமீப காலமாக புர்காவில் மட்டுமே தோன்றும் மும்தாஜ் ஆன்மீகத்தில் சமீப காலமாக மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்ட மும்தாஜ் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியியிட்டுளளார். அந்த  வீடியோவில் தெரிவித்திருப்பதாவது,

ரொம்ப அழகான வாழ்கையை இந்த  மார்க்கம் எனக்கு கொடுத்து இருக்கு. நான் எவ்வளவு பாவம் செய்தனோ அதையெல்லாம் நான் இப்ப சுத்தம் பண்ணிட்டான் இப்போ நன்மைகள் செய்கிறேன். இந்த காலால தான் ஆடினேன் இப்போ இந்த காலால தான் கஹ்பாவை தவாப் செய்துள்ளேன். மக்களை நீதான் இறைவா காப்பாத்தணும் ரொம்பவே அழுது வீடியோவை பதிவு செய்துள்ளார் மும்தாஜ் .

 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola