Mohanlal angry : நான் என்ன பண்றது” சுத்துப்போட்ட REPORTERS! திணறிய மோகன்லால்
ஹேமா கமிட்டி ரிப்போர்ட் மலையாள திரையுலகில் புயலை கிளப்பியுள்ள நிலையில், AMMA சங்கத்தில் இருந்து விலகிய மோகன்லால் முதன்முதலாக செய்தியாளர்களை சந்தித்தார். அடுத்தடுத்த கேள்விகளால் ரவுண்டிகட்டிய போது, நான் எங்கேயும் ஓடிவிடவில்லை என ஆவேசமாக பேசியுள்ளார்.
நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகைகள் அடுத்தடுத்து தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை சொல்லி வருகின்றனர். இதனால் மோகன் லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். மோகன்லால் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்த நிலையில், அவருக்கு எதிராக நடிகைகள் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்தநிலையில் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் தொடர்பாக மோகன்லால் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளார். செய்தியாளர்கள் அவரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கினர். அப்போது பேசிய அவர், ‘தற்போதைய பிரச்னைக்கு ‘அம்மா’ அமைப்பை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை. “ஹேமா கமிட்டி அறிக்கையை நான் வரவேற்கிறேன். நான் கமிட்டியின் முன் வந்து எனக்கு தெரிந்த அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். நான் பவர் க்ரூப்பில் இருப்பதாக விமர்சிக்கிறார்கள். நான் அப்படி எந்த க்ரூப்பிலும் இல்லை. நான் இன்னும் அந்த அறிக்கையை படிக்கவில்லை. ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகமும் இதற்குப் பதிலளிக்க வேண்டுமே தவிர, அனைத்து பிரச்னைகளுக்கும் அம்மா சங்கம் மட்டுமே பதில் சொல்ல முடியாது. நீதிமன்றமும், கேரள அரசும் விசாரித்துக் கொண்டு இருக்கும் போது, எனக்கு மட்டும் எப்படி எல்லாம் தெரியும். உங்களுக்கு நான் எப்போதும் ஒத்துழைப்பு கொடுப்பேன். நான் எங்கும் ஓடிவிடவில்லை. திரைப்பட வேலைகள் மற்றும் எனது மனைவியின் அறுவை சிகிச்சை வேலைகளில் பிஸியாக இருந்தால் கேரளாவில் இருந்து கேரளாவில் இருந்து சென்றிருந்தேன். விசாரணைக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். ஒரே விஷயத்தை செய்தியாளர்கள் திரும்ப திரும்ப பேச வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இனி இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் ” என கூறினார்.
இருப்பினும் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்ததால் நன்றி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் மோகன்லால்.