Mammootty on hema committee report | சிக்கலில் மோகன்லால்.. மம்முட்டிக்கு SUPPORT! பரபரக்கும் கேரளா
மலையாள சினிமாவில் பாலியல் விவகாரம் நடிகர் மோகன்லாலுக்கு சிக்கலாக மாறியுள்ள நிலையில், மற்றொரு பக்கம் நடிகைகளுக்கு ஆதரவாக மம்முட்டி பேசியுள்ளது பாராட்டை பெற்று வருகிறது.
சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள திரையுலகமே ஸ்தம்பித்து போய்விட்டது. இதனால் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். மேலும் பிரபல நடிகர்களான மோகன்லால், மம்முட்டி உட்பட யாரும் தெரிவிக்காமல் இருந்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடன் பேசிய மோகன்லால், அம்மா சங்கம் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் பேசினார். செய்தியாளர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலையே கொடுத்தார். மோகன்லாலின் பதிலும் சமூக வலைதளங்களில் விமர்சன வலையில் சிக்கியது.
தற்போது நடிகர் மம்முட்டியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார், இந்த விவகாரத்தை தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் மலையாள திரையுலகில் வந்துள்ள பாலியல் புகார்கள் குறித்து ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை வரவேற்கிறேன்.
இது வெறும் அறிக்கையோடு நிற்காமல் அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் இருக்க சட்டங்கள் இயற்ற வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில் காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும், மலையாள சினிமாவில் பவர் குரூப் என்று ஒன்று கிடையாது. அப்படி இருந்தாலும் நீண்ட நாள் தாக்குப்பிடிக்காது.
மக்களின் பார்வை சினிமாவின் மீது இருப்பதால் இங்கு ஏற்ப்படும் பிரச்னைகள் சிறியதாக இருந்தாலும் சரி பெரியதாக இருந்தாலும் சரி அது மக்களிடையே தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. ஆகவே ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளை அமலபடுத்த வேண்டும் என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் தெளிவாக தனது கருத்தை நடிகர் மம்முட்டி பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்