Madhampatti Rangaraj | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
ஹெய் பொண்டாட்டி என மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி அனுப்பிய வீடியோவை வெளியிட்டு ஜாய் கிரிஷில்டா வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி கைவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஷில்டா புகார் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் ஜாய் கிரிஷில்டாவுக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் ரங்கராஜ் என குறிப்பிடப்பட்டுள்ளதை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஜாய் மாதம்பட்டி ரங்கராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாய் க்ரிஷில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் விசாரனைக்காக மகளிர் ஆணையத்தில் ஆஜராகி இருந்தனர். அப்போது நடந்த விசாரனையில் ரங்கராஜ் ஜாய் க்ரிஷில்டா மேல் காதல் கொண்டிருந்ததாகவும், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தை தன்னுடையது தான் என ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிஷில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணைய விசாரனையில் ஜாய் கிரிஷில்டாவை இரண்டாம் திருமணம் செய்தது உண்மை தான் எனவும் குழந்தைக்கு அப்பா நான் தான் எனவும் அவர் ஒப்புக்கொண்டதாக மகளிர் ஆணைய பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.. இதனை தொடர்ந்து ஜாய் கிரிஷில்டா தனது இன்ஸ்டா பக்கதில் 3 பாகமாக வீடியோ வெளியிட்டு நீ ஒரு ஆம்பளையா இருந்த டிஎனஏ டெஸ்ட் எடுத்து prove பண்ணி காட்டு என காட்டமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று காலை மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய வீடியோவை வெளியிட்டு ஜாய் கிரிஷில்டா பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில் இந்த வீடியோ என்ன மிரட்டலின் பெயரில் அனுப்பியதா??! Mr husband #madhampattyrangaraj மக்களே, ப்ளீஸ் சொல்லுங்க — இதுல லவ் லா பேசுறாரா இல்ல மிரட்டலின் பெயரில் பேசுறாரா? கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்ற மாதிரி இருக்கு என ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.