ரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

நடிகர் ரவி மோகன் ஆர்த்தி விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடகி கெனிஷா அதிரடியாக தெரிவத்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த ஆண்டு விவாகரத்தை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆர்த்தி மற்றும் ரவி குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவின. ரவியின் சொத்துக்களை அபகரித்து அவரை திருமண வாழ்க்கையில் மரியாதையின்றி நடத்தியதாகவும் இதனால் ரவி மோகன் இந்த விவாகரத்தை முன்னெடுத்ததாகவும் கூறப்பட்டது. அதே போல் ரவி மோகனுக்கும் கெனிஷா பிரான்சிஸ் என்கிற பாடகிக்கும் இடையில் காதல் தொடர்பே இந்த விவாகரத்திற்கான காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தனக்கும் கெனிஷாவுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் ரவி மோகன் கூறியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் திருமண நிகழ்வு ஒன்றில் சேர்ந்து கலந்துகொண்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கெனிஷா என பலர் அவரை குற்றம் சாட்டினர். அதே நேரம் ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையில் இரண்டு குழந்தைகளும் தான் தனியாக கஷ்டப்படுவதாக தெரிவித்திருந்தார் . இதனால் இணையத்தில் ரசிகர்கள் இரு தரப்புகளாக பிரிந்து இரு தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 

இதற்கிடையில், தங்களுக்கு இடையேயான பிரச்சினை குறித்து ரவிமோகன், ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில், பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களுக்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது, பாலியல் வல்லுறவு மிரட்டல், ஆபாசமாக திட்டுவது, கொலை மிரட்டல் விடுவோரின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்கள் என்னை பற்றிய அவதூறுகளை அனுமதிக்கக் கூடாது. சமூக வலைத்தளங்களில் மிரட்டல் விடுத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola