Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy | PM Modi

பஹல்காமில் நடந்த தீவரவாத தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாடியதாக வெளியான தகவல் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஹல்கமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடந்த அன்றே தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு இந்த தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நம்புகிறது. 

இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணைய அலுவலகத்தில் இன்று அங்கு பணியாற்றும் ஒருவர் கேக் ஒன்றுடன் நடந்து சென்றார். அப்போது, அவரிடம் எதற்காக கேக் கொண்டு செல்கிறீர்கள்? எதற்காக கொண்டாட்டம்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த ஊழியர் எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். 

பகல்ஹாம் தாக்குதல் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அலுவலகத்தின் கொண்டாட்டத்திற்காக கேக்குடன் சென்றிருப்பது மேலும் பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்திற்கு பாகிஸ்தானே முழு காரணம் என்று இந்திய அரசாங்கம் நம்பும் நிலையில், டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு வழங்கப்பட்ட பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்கனவே உறவு சிக்கலாக உள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பிறகு மேலும் சிக்கல் ஆகியுள்ளது. புல்வாமா தாக்குதல், பதன்கோட் தாக்குதல் ஆகிய தாக்குதலை காட்டிலும் இந்த தாக்குதல் மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola