Kajal Agarwal : காஜல் அகர்வால் மரணம்?ஷாக்கில் ரசிகர்கள் உண்மை பின்னணி!
பிரபல சினிமா நடிகை காஜல் அஹர்வால் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், என்னது நான் செத்துட்டேனா..யாரும் நம்பவேண்டாம் என தன்மீதான வதந்திகளுக்கு தானே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை காஜல் அஹர்வால்.
தமிழில் சில திரைப்படங்களே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் காஜல் அஹர்வால். விஜய், அஜித், சூர்யா என மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் காஜல் நடித்திருக்கிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இடம்பெறாதது விமர்சனத்திற்குள்ளானது. ஒருவேளை பார்ட் 3 யில் காஜல் இருக்கலாம் என ஃபேன் கெஸ்ஸும் உள்ளது.
ஆனால் சட்டென ஏறிய மார்க்கெட் விறுவிறுவென சரிந்தது போல தற்போது அட்ரெஸ் இல்லாமல் இருந்து வருகிறார். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையிலும் மும்முரம் காட்டி வருகிறார் காஜல். கடந்த 2020 ஆம் ஆண்டும் தொழிலதிபர் கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்தார் காஜல். இந்த தம்பதிக்கு நீல் எனும் ஆண் குழந்தையும் உள்ளது.
பெரிதாக சினிமாவில் தலை காட்டவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். வெகேஷன் பிக்ஸ், வொர்க் அவுட் பிக்ஸ் என பதிவிட்டு ரசிகர்களை பிஸியாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் திடீரென விபத்தில் சிக்கிய நடிகை காஜல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகவும் ஆதாரமற்ற தகவல்கள் தீயாய் பரவின..
இவை காஜல் காதுகளுக்கே செல்ல, பதறிப்போன காஜல் அப்படி எல்லாம் எதுவும் இல்லை என தன்மீதான வதந்திகளுக்கு எண்ட்கார்டு போட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காஜல், நான் விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். கடவுள் அருளால் நல்லபடியாக இருக்கிறேன்..இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என காஜல் அஹர்வால் தெரிவித்துள்ளார்.