’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஷில்டா விவகாரம் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், மகளிர் ஆணைய விசாரனையில் ஜாய் கிரிஷில்டாவை இரண்டாம் திருமணம் செய்தது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ளார் ரங்கராஜ்.. மேலும் அவர் வயிற்றில் இருக்கும் குழந்தை தன்னுடையது தான் எனவும் அவர் ஒப்புக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி கைவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிஷில்டா புகார் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் ஜாய் கிரிஷில்டாவுக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் ரங்கராஜ் என குறிப்பிடப்பட்டுள்ளதை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஜாய் மாதம்பட்டி ரங்கராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜாய் க்ரிஷில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் விசாரனைக்காக மகளிர் ஆணையத்தில் ஆஜராகி இருந்தனர். அப்போது நடந்த விசாரனையில் ரங்கராஜ் ஜாய் க்ரிஷில்டா மேல் காதல் கொண்டிருந்ததாகவும், அவர் வயிற்றில் இருக்கும் குழந்தை தன்னுடையது தான் என ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக ஜாய் கிரிஷில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மகளிர் ஆணைய விசாரனையின் போது தன்னை இரண்டாம் திருமணம் செய்ததை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக ஜாய் க்ரிஷில்டா தெரிவித்துள்ளார். மேலும் குழந்தையின் தந்தை தான் தான் என அவர் ஒப்புக்கொண்டதால் டிஎன் ஏ ஆதாரங்கள் தேவையில்லை எனவும் வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுப்பு தெரிவிக்க கூடாது எனவும் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாகவும் ஜாய் க்ரிஷில்டா தெரிவித்துள்ளார்
பிரபல சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.