Jayam Ravi shifted Mumbai : விடாப்பிடியாக நிற்கும் ஆர்த்தி மும்பைக்கு நகர்ந்த ஜெயம் ரவிப்ளான் என்ன?

ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரத்தில் ஆர்த்தியின் திடீர் சமாதான முடிவுக்கு பின்னால் பொருளதார காரணம் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் ஜெயம் ரவி தனது விவாகரத்தை அறிவித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. விவாகரத்து பற்றி ஜெயம் ரவி தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்ததாக ஆர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனீஷா பிரான்சிஸ் இடையிலான உறவே இந்த விவாகரத்திற்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. 

மறுபக்கம்  மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெயம் ரவியை பல்வேறு அடமானங்களுக்கு உட்படுத்தியதாகவும் திருமண வாழ்க்கை வெறுத்து போய் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது குறித்து ஜெயம் ரவியும் ஒரு சில நேர்காணல்களில் பேசியிருந்தார். 

மேலும் ஆர்த்தி ரவி திருமணம் என்கிற பந்தத்தை நான் ரொம்பவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் நான் புன்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம்" என ஜெயம் ரவியுடன் சமாதனம் செய்யும் போக்கில் அறிக்கையில் கூறியிருந்தார். 

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனுக்கு தனியார் யுடியுப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது. ஜெயம் ரவியுடன் பயில்வான் ரங்கநாதன் தனிப்பட்ட முறையில்  பேசிய போது ஆர்த்தி மூலம் தனக்கு பல மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது என்றும் தன்னுடைய குழந்தைகளின் நலனுக்காக அதை வெளியில் பேச விரும்பவில்லை. மேலும் ஜெயம் ரவி பல விஷயங்களை வெளியில் சொல்லாமல் மறுப்பதாகவும் ஆர்த்தி பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்றும் ஜெயம் ரவி கூறியதாக பயில்வான் தெரிவித்தார், 

ஆர்த்தியின் திடீர் சமாதான நடவடிக்கைக்கு பின்னால் அவரது பொருளாதார காரணம் உள்ளதாக கூறபபடுகிறது. ஜெயம் ரவி தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் ஆர்த்தியின் குடும்பத்தை பொறுத்தவரை அவரது அம்மா சுஜாதவுக்கு ஒரு பங்களா மட்டும் தான் உள்ளது, அதன் மீது 5-க்கும் மேற்ப்பட்ட வழக்கில் நிலுவையில்  உள்ளது. எப்போதாவது வெளிநாட்டு காரை விற்பனை செய்தால் மட்டுமே அதிலிருந்து கமிஷன் கிடைக்கும்.

தற்போது ஜெயம் ரவி மும்பையில் புதியதாக ஒரு அலுவலகத்தை திறந்து ஹிந்தி தயாரிப்பாளர்களை சந்தித்து தனது மார்க்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முயன்று வருகிறார். இதனால் ஜெயம் ரவியை பிரிந்தால் பொருளரதார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பதால் தான் தங்கை முட்டையிடம் வாத்தான ஜெயம் ரவியிடம் ஆர்த்தி சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறார். ஆனால் மனதளவில் உடைந்து இருக்கும் ஜெயம் ரவி தனது மகன் அம்மா-அப்பா சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட போது கூட ஜெயம் ரவி அதை மறுத்தவிட்டார் என்பது கூறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola