‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa
நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்து, அவரது மனைவி ஆர்த்தி ரவி, தனது மகன்களுக்கு ரவி மனரீதியாகவும் பணரீதியாகவும் எந்த உதவியும் செய்யவில்லை, ஒரு அப்பாவாக தனது கடமையை செய்ய தவறிவிட்டார் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தி ரவி தம்பதி தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இவர்களது விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ரவி மனைவி ஆர்த்தி மற்றும் இரண்டு மகன்களை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த ஜோடியின் பிரிவு அறிவிக்கப்பட்ட போதே பாடகி கெனிஷாவுடன் தொடர்பு என ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் கெனிஷா வெறும் தோழி தான் எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரவி.
எனினும் ரவியின் மனைவி ஆர்த்தி தனக்கும் இந்த விவாகரத்து முடிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது அவரது தனிப்பட்ட முடிவு என அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் ரவியை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்து முடியவில்லை என விரக்தியில் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி கெனிஷா வுடன் வருகை தந்திருந்தார். மேட்சிங் உடை, ஜோடியாக போட்டோஷூட் என அலப்பறை செய்தார் ரவி. இவர்களது வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதை அடுத்து, தற்போது ரவியின் மனைவி ஆர்த்தி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த ஓராண்டாக நான் மௌனமாக காத்தது எனது மகன்களின் மன நிம்மதிக்காக மட்டுமே. இத்தனை நாட்களாக என்மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்ததற்கு காரணம் எனது தரப்பில் நியாமம் இல்லை என்பதால் அல்ல. என் மகன்களுக்கு அந்த பாரத்தை நான் கொடுக்க விரும்பாததால் தான். எனது விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, ஆனால் 18 வருடம் என்னுடன் இருந்த எனது கணவர் இன்று அவரது கடமை தவறிவிட்டார்.அவர் என்னை மட்டும் உதறிச்செல்லவில்லை. அப்பாவாக தான் செய்யவேண்டிய கடமைகளையும் உதறி விட்டார்.
ஒரு காலத்தில் தனது பெருமை என கருதிய மகன்களுக்கு மன ரீதியிலும் பண ரீதியிலும் எந்த உதவியும் செய்யாமல் உள்ளார். நாங்கள் சேர்ந்து கட்டிய வீட்டில் இருந்து எங்களை வங்கி அலுவலர்களை வைத்து விரட்டினார். பணப்பிசாசு என என்மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் பணம் தான் முக்கியம் என நான் கருதியிருந்தால், எப்போதோ அதை செய்திருப்பேன்.
எனது மகன்களுக்கு 10 மற்றும் 14 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் அவர்களுக்கு ஏன் இத்தகைய தண்டனை. சட்ட சிக்கல்களை புரிந்துகொள்ளும் வயது இல்லை அவர்களுக்கு, ஆனால் அவர்கள் கைவிடப்பட்டுவிட்டனர் என்பதை அவர்கள் உணர்கின்றனர். என்னை சாடி நீங்கள் தெரிவிக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அவர்கள் அறிவார்கள், இன்று நான் ஒரு மனைவியாக குரல் கொடுக்கவில்லை, அம்மாவாக பேசுகிறேன்
பொதுவாழ்க்கையில் உங்களது பெயரை நீங்கள் மாற்றிவிடலாம். ஆனால் அப்பா என்பது வெறும் பட்டம் அல்ல அது ஒரு கடமை.
என ரவி குறித்து உருக்கமான பதிவிட்டுள்ளார்.
மேலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக கணவரை பிரியாததால் தன்னை யாரும் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் எனவும் ஆர்த்தி ரவி என்றே தன்னை அடையாளப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.