Jani Master Arrest | பாலியல் வன்கொடுமை தலைமறைவான ஜானி மாஸ்டர் ! தட்டித்தூக்கிய போலீஸ்

Continues below advertisement

தமிழ் திரைப்படத்துறையில் பிரபல நடன இயக்குநராக உள்ள ஜானி மாஸ்டர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாகி இருந்த ஜானி மாஸ்டார் தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புட்ட பொம்மா , மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து  உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர். சமீபத்தில் மேகம் கருக்காதா பாடலுக்கு இவருக்கு சிறந்த நடனக்கலைஞருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்த விருதிற்கு இவர் முழுக்க முழுக்க தகுதியானவர் என  ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில்,  அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் மீது 21 வயது பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் 21 வயது பெண் ஒருவர் நடன இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டிய பெண் ஹைதராபத் நார்சிங்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த புகாரை நார்சிங்கி காவதுறை விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நார்சிங்கி காவல் துறையினர் ஜானி மாஸ்டர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளார்கள். 

முன்னதாக ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றிய சதிஷ் என்பவர் சமீபத்தில் அவர் மீது புகாரளித்திருந்தது ஒரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு. படப்பிடிப்பின் போது பெண்களுக்கு ஜானி மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதை தடுக்கவே நான் புகாரளித்ததாக சதீஷ் தெரிவித்திருந்தார். ஆனால் ஜானி மாஸ்டர் சதீஷ் கூறியதை பத்திரிகையாளர் சந்திப்பில் மறுத்து பேசியிருந்தார்.

மேலும் சிரஞ்சீவியின் ஜனசேனா கட்சியில் உள்ள இவர் கடந்த தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். இந்நிலையில் பெண் நடன இயக்குநர் அளித்த பாலியல் புகாரின் பேரில் தற்போது தலைம்றைவாகி இருந்த ஜானி மாஸ்டரை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram