Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi

ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லக்‌ஷ்மி மேனனின் மூன்று நணபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ள லக்‌ஷ்மி மேனனை காவல் துறை தேடி வருகிறது.

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் லக்‌ஷ்மி மேனன் . கேரளாவை சேர்ந்த இவருக்கு தமிழ் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. ஒருபக்கம் பள்ளியில் படித்துவந்த அவர் இன்னொரு பக்கம் பயங்கர மெச்சூரான ரோல்களில் நடித்து அசத்தி வந்தார்.  சுந்தரபாண்டியன் , பாண்டிய நாடு , குட்டி புலி , கொம்பன் என தொடர் வெற்றிகளைக் கண்டார். தற்போது ஐடி ஊழியரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி அவரை தாக்கிய குற்றத்தில் கேரளா போலீஸான் தேடப்பட்டு வருகிறார்

லக்‌ஷ்மி மேனனும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஐடி ஊழியரை காரில் கடத்தி அவரை தாக்கியதாக கேரளா போலிஸீடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி கொச்சியில் உள்ள  பார் ஒன்றில் லக்‌ஷ்மி மேனன் தனது நண்பர்களுடன் இருந்தபோது மற்றொரு கும்பலுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  எதிர் கும்பலில் இருந்த ஒருவர் காரில் வீடு சென்றபோது லக்‌ஷ்மி மேனனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அவரது  காரை பிந்தொடர்ந்து மடக்கி பிடித்துள்ளார்கள். காரில் இருந்த ஆலியார் ஷா சலீம் என்பவரை வெளியே இழுத்து தங்களது காரில்  கடத்தி சென்று அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.  இதற்கான வீடியோ ஆதாரம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் காரில்  சென்ற ஐ.டி ஊழியரிடம் லக்‌ஷ்மி மேனனின் நண்பர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருக்க லக்‌ஷ்மி மேனன் அவர்களுடன் நிற்கிறார். 

இது தொடர்பாக லக்‌ஷ்மி மேனனின் நணபர்கள் மிதுன் , அனீஷ் மற்றும் சனமோல் ஆகிய மூவரை கேரளா போலீஸ் கைது செய்துள்ளது. இவர்களுடன் சம்பந்தபட்ட லக்‌ஷ்மி மேனன் தற்போது தலைமறைவாகியுள்ளார் . அவரை காவல் துறை தேடி வருகிறது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola