”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்

தன் காதலருக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் இந்து மதத்தை விட்டு கிருஸ்தவ மதத்திற்கு மாறப்போகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.


தமிழ் சினிமா முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி முருகன்,தொடரி,ரெமோ,பைரவா,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் அந்தோணி என்பவரை 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும், எங்களுடைய காதல் இன்னும் தொடரும் என்றும் கூறியிருக்கிறார். காதலரோடு எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷும் அவருடைய காதலர் அந்தோணியும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். அந்தோணி தற்போது கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக இருக்கிறாராம். ஹபீப் ஃபீரூக்குடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன் முதன்மை உரிமையாளராக இருக்கிறாராம்.
அதுபோல அந்தோணிக்கு கேரளா மற்றும் துபாயில் கோடி கணக்கான சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பள்ளி நாட்களில் இருந்து கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பராக இருந்து.. கொச்சியில் இருவரும் இளங்கலை படிப்பை தொடர்ந்து நட்பை காதல் என்கிற அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணத்திற்கு இரண்டு வீட்டில் சம்மதம் தெரிவித்ததால் அதை வெளிப்படையாக அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனியின் திருமணம் கோவாவில் கிறித்தவ மதப்படி சர்ச்சில் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருமணத்திற்கு முன்பாக கீர்த்தி சுரேஷ் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகை நயன்தாரா தனது காதலுக்காக கிறித்தவத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியது குறிப்பிடத் தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola