Irfan View gender prediction test : கைதாகிறாரா இர்பான்? ரசிகர்கள் அதிர்ச்சி..

Continues below advertisement

 கைதாகிறாரா இர்பான்? ரசிகர்கள் அதிர்ச்சி..


பிரபல யூடியூபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் தொடர்பாக வீடியோ வெளியிட்டது சர்ச்சையில் சிக்கிய நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. 

உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று அங்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டும் விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோவாக பதிவிட்டு வருபவர் இர்ஃபான். இவருக்கு சமூக வலைதளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில், இவரது மனைவி ஹசீஃபா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இதனிடையே குழந்தையின் பாலினம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை அறிவிக்கும் செலிபிரேஷன் வீடியோவையும் பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இர்ஃபானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வதில் தவறில்லை. Gender reveal party என வைத்து பாலினத்தை சொல்லும் வழக்கம் தற்போது பரவலாக இருக்கிறது. இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வதும், அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மறைமுகமாக இதனை செய்யும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது. குழந்தையின் பாலினத்தை அறிவித்தது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என இர்ஃபானுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக சுகாதாரத்துறை காவல்துறையிடம் பரிந்துரை செய்துள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram