Indian 2 Review | அலறவிட்டதா இந்தியன் 2 ஷங்கரின் டபுள் ட்ரீட்..முதல் விமர்சனம் இதோ

Continues below advertisement

ஷங்கர் இயக்கி கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்திற்கு டவிட்டரில் என்ன மாதிரியான விமர்சனங்களை வழங்கியுள்ளார்கள் என்று பார்க்கலாம்..

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்தியன் 2 படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமுக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்தியன் 2 படத்தின் ஹைலைட்ஸ் என்ன , குறைகள் என ரசிகர்கள் சொல்வது என்னவென்பதைப் பார்க்கலாம்.

இந்தியன் 2 படத்திற்கு கமலுக்கு புதிய டைட்டில் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தியன் 2  படத்தின் முதல் பாகத்தில் ரஹ்மான் இசையமைத்த பின்னணி இசை சில காட்சிகளில் அப்படியே இடம்பெற்றுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.

ஒரு பக்கம் அனிருத் இன்னொரு பக்கம் ஏ.ஆர் ரஹ்மான் என ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். மேலும் படத்தின் இறுதியில் இந்தியன் 3-ஆம் பாகத்தின் டிரைலரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது


இந்தியன் 2 வின் முதல் பாகம் ஷங்கர் படங்களுக்கே உரிய எமோஷன்  மற்றும் மாஸ் காட்சிகள் அடங்கியதாக இருப்பதாகவும் .சித்தார்த்தின் காட்சிகள் மற்றும் கமலின் எண்ட்ரி சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இரண்டாம் பாதியில் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் சண்டைக் காட்சிகள் இந்தியன் 2 படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவாக ரசிகர்கள் கருதுகிறார்கள் 

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் இந்தியன் 2 படம் வெகுவாக கவர்ந்துள்ளது. பிரம்மாண்டமான பாடல் காட்சிகள் , கமலின் எண்ட்ரி , சித்தார்த் , பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram