Inban Udhayanidhi | ஹீரோவாகும் இன்பன் உதயநிதி! மாஸ் காட்டும் மாரிசெல்வராஜ்! நடிப்பு பயிற்சி பின்னணி!

Continues below advertisement

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் இன்பன் உதயநிதி! பரபரக்கும் கோலிவுட்!

தமிழ் சினிமாவில் தற்போது பரவலாக பேசப்படும் பெயராக மாறியுள்ளது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பேரனும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி தான். காரணம் தனுஷ் இயக்கத்தில் வெளியான இட்லி கடை படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார் இன்பன். அதுமட்டும் அல்லாமல் படத்தின் ப்ரோமஷன் வேலைகளில் பிஸியாக தன்னை வைத்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பரவலாக அப்போதே பேசப்பட்டது. 

அதேபோல இன்பன் நடிப்பு பயிற்சி செல்வது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்கலில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. அப்போதே அவர் நிச்சயம் சினிமாவில் ஹூரோவாக வலம் வரும் என்று பேசப்பட்டது. எது எப்படி இருந்தாலும் அவர் தீவிரமாக நடிப்புக்குப் பயிற்சி எடுத்து வருகிறார் என்பது மட்டும் உறுதியாக சொல்லப்பட்டது. 

இதனை உறுதிபடுத்தும் விதமாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இன்பநிதியை ஹீரோவாக வைத்து இயக்க பல  முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாகவும், இறுதியாக தனது தந்தை உதயநிதி நடித்த மாமண்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் படத்திலேயே நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்தனர். காரணம் உதயநிதிக்கும், மாரி செல்வராஜுக்கும் நல்ல நட்பு இருப்பதாலும், அழுத்தமான கதைகளை இயக்குவதில் வல்லவர் என்பதாலும் அவர் தேர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்ததகவல் தற்போது வரை இருதரப்பும் மறுக்காததால் இன்பன் உதயநிதி விரைவில் ஹூரோவாக வலம் வருவார் என்று பேசப்படுகிறது.

இப்போது மாரி செல்வராஜ்  தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய அடுக்குமுறைகளுக்கு எதிரான கதைகளத்தை கொண்ட  பைசன் படத்தை இயக்கி உள்ளார். அதில் நடிகர் விக்ரமனின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார், இந்தபடம் அக். 17, தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. 

அதேபோல மாரியின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது போக நடிகர் கார்த்தி உடன் ஒரு படம் இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பேசப்படுகிறது. இந்தநிலையில் தனுஷ், கார்த்தி படங்களுக்கு முன்பே இன்பன் உதயநிதியின் அறிமுக படத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola