Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

என் பாடலை பயன்படுத்தினால் நஷ்ட ஈடு  தர வேண்டும் என்று இளையாராஜா கூறும் நிலையில், முன்னணி இசையமைப்பாளார் தேவா என்க்கு பணத்தை விட என் பாடலை ரசிப்பது தான் எனக்கு புகழ் என கூறி இருப்பது இருவரின்  ரசிகர்களுக்கு இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இசை எனும் வார்த்தை பூவுலகில் இருக்கும் வரை, இசைஞானி இளையாராஜா என்றொரு பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அண்மைக்காலமாக இளையராஜாவின் காப்புரிமை விவகாரம் என்பது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. தனது பாடல்களை பயன்படுத்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்புவதன் மூலமும் இளையராஜா அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறார். இதனால் நெட்டிசன்கள் இரு தரப்பாக பிரிந்து, ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் வழங்கும் பாடல் மற்றும் பின்னணி இசையை,  ஒரு குறிப்பிட்ட படத்தில் தனக்குத் தேவையான இடத்தில் பயன்படுத்த மட்டுமே தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு. அதை ஒரு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் விற்றாலும், அந்தப் படத்தின் பெயரில் மட்டுமே லாபங்களை அனுபவிக்க முடியும். அதைத்தாண்டி மற்ற படங்களிலோ, அதனை ரீமிக்ஸ் செய்து வேறிடங்களிலோ பயன்படுத்த உரிமை கிடையாது. சர்வதேச காப்புரிமை சட்டமும் இதைத்தான் சொல்கிறது.

இளையராஜா தன் உரிமைக்காக மட்டும் தான் வழக்கு நடத்துகிறாரா? என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. தனிநபர் திறமையையும், உழைப்பையும் சுரண்டும் ஒட்டுமொத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவே அவர் போராடி வருகிறார்.  ஒருவேளை தான் இந்த சட்டப் போராட்டத்தில் வென்றால், அதன்மூலம் அவருக்கு புதிய வருமானம் வந்தாலும் அதைத் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்துக்கே முழுமையாக செல்லும்படி எழுதித் தந்துள்ளார். அவரின் வாரிசுகளுக்குக் கூட தரவில்லை. ஆனால், இதை கூட அறியாத சில அதிமேதாவிகள், இளையாராஜாவை மிகவும் சிறுமைப்படுத்தி எழுதுகின்றனர்.

இந்தநிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா நான் என் பாடலுக்கு  copyright-லாம் கேக்கமாட்டேன். அதன் மூலம் எனக்கு பணம் வருமே தவிர புகழ் வராது. இப்ப பல படங்களில் என்னோட பாடல்கள்ல பயண்படுத்துறாங்க..இதான் மூலம் பல 2 k கிட்ஸ்-க்கு என் தெரிய வருது... கோடி கோடியா காசு கொடுத்தாலும் இந்த புகழ் கிடைக்குமா? என்று தெரிவித்துள்ளார். இது நேரடியாக இளையராஜாவை தேவா தாக்கி பேசுவதாக தெரிகிறது. இப்படி முன்னணி இசையமைப்பாளாராக இருக்கும் தேவா இளையராஜவை தாக்கி பேசி இருப்பதாக கூறப்படுவது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola