GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஆமாம் நீ பெரிய இதுன்னு தெரியும் போ.. என்று நாக்கை மடித்து, வெட்டியை தூக்கிக்கொண்டு.. காதில் கேட்க முடியாத ஆபாச வார்த்தைகளால் யுடியுப் பிரபலம்  ஜி.பி.முத்து வீதியில் இறங்கி சண்டைபோடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி வெங்கடாசலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சமூக வலைதள பிரபலம் ஜி.பி.முத்து மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவில் என்று சொல்லபடுகிறது.

இந்நிலையில் இந்த கோயிலில் தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்றைய தினம் புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் அந்த கோவிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை செய்வதற்காக வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஜி.பி.முத்து மகேசை இனி இந்த கோவிலுக்கு  நீ பூஜை வைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். அப்போது பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் ஜி.பி.முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீதிக்கு வந்த ஜி.பி.முத்து மற்றும் எதிர் தரப்பினர் இருவரும் மாறி மாறி மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயண்படுத்தி வீதியில் நின்று சண்டை போடும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola