Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

Continues below advertisement

படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு இயக்குநர் ஒருவர் பெண்களிடம் தகாத வார்த்தைகளை உபயோகிப்பதாக பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி குற்றம் சாட்டியுள்ளது சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

சுதீர் சுதிகலி திவ்யபாரதி நடிப்பில் GOAT என்ற தெலுங்கு திரைப்படம் உருவாகி வருகிறது இந்த படத்தில் முதலில்  இயக்குநராக நரேஷ் குப்பிலி என்பவர் கமிட்டாகி பாதி படம் இயக்கினர். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணங்களால் இந்த படத்தில் இருந்து இயக்குநர் நரேஷ் விலகினார். பின்னர் தயாரிப்பாளரே படத்தை இயக்கினார்..இதனையடுத்து தற்போது நடிகை திவ்யபாரதி நரேஷ் குப்பிலி மீது பரபர குற்றச்சாட்டு ஒன்ற முனவைத்துள்ளார்.

நரேஷ் குப்பிலியின் எக்ஸ் பதிவு ஒன்றை பகிர்ந்த திவ்யபாரதி அவர் தன்னை சிலகா என குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சிலகா என்றால் தெலுங்கில் கிளி என்பது பொருள்.

அந்த பதிவில் திவ்யபாரதி கூறியுள்ளதாவது"பெண்களை 'Chilaka' (தெலுங்கில் கிளி எனப் பொருள்படுகிறது) சொல்வது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல, அது 'misogyny' மனநிலை கொண்டவர்களின் வக்கிரமான மனநிலையின் வெளிபாடு. பெண்ணை புகழ்வதுபோல அவர்களது வெளித்தோற்றத்தை வக்கிரமாக வர்ணிக்கும் சொல் அது. இது ஓர் உதாரணம்தான்.
இதுபோல பல தகாத வார்த்தைகளை, தகாத எண்ணத்துடன் படப்பிடிப்புத் தளங்களில் பெண்கள் மீதும் நடிகைகள் மீது சில இயக்குநர்கள் பயன்படுத்துகிறார்கள். பெண்களை அவமதிக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் படப்பிடிப்பில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த இயக்குநர். படப்பிடிப்புத் தளங்களில் இயக்குநர்கள் இதுபோன்ற தகாத சொற்களைப் பயன்படுத்தும்போது அங்கிருக்கும் ஹீரோ உள்ளிட்ட பலரும் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இது என்னமாதிரியான மனநிலை என்று தெரியவில்லை.
இங்கு எல்லோருக்கும் சுயமரியாதை இருக்கிறது. அதை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. நான் ஒவ்வொரு முறையும் இதுபோன்றவர்கள் இல்லாத படக்குழுவையே தேர்வு செய்து நடிக்க நினைப்பேன். அதுதான் இப்போதைக்கு என்னால் முடிந்தது. இருப்பினும் இதுபோன்ற விஷயங்கள் ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் என்னை வருத்தமடையச் செய்கின்றன"
என கூறியுள்ளார்

சமீபத்தில் நடிகை கௌரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் நடிகையின் எடை குறித்து கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..அந்த சம்பவத்தின் போது கௌரி தனக்காக குரல் எழுப்ப, சம்பந்தப்பட்ட நபர் நான் ஹீரோவிடம் தானே கேட்டேன் என திமிராக பேசினார். அப்போது அருகில் இருந்த இயக்குநர் மட்டும் நடிகர் யாருமே கௌரிக்காக குரல் கொடுக்காதது விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola