ABP News

AR Murugadoss Issue | செய்தியாளர் vs AR முருகதாஸ் உதவியாளர்‘’வேற மாதிரி ஆயிடும்’’

Continues below advertisement

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸினை வீடியோ எடுத்த  செய்தியாளர்களின் கேமரா மற்றும் செல்போனை  தட்டிவிட்டு அவரது உதவியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று ஆனி உத்திர வருசாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி திரைப்பட  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமார்   10-க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.அவர்களை செய்தியாளர்கள்   வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.  அப்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர்கள்  செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை தடுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த ஒரு தனியார் தொலைக்காட்சி செயதியாளரின் செல்போனை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. 

ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்த சம்பவம்  கோவில் வளாகத்தில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram