கருப்பன் கோயிலில் தனுஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம் கிடா வெட்டி தடபுடல் | Dhanush at temple

Continues below advertisement

சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலில் தனுஷ் தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்து .தனது குடும்பத்தினருக்கு கிடா வெட்டி விருந்து வைத்தார்.

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும்  இட்லி கடை  திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது கடந்த  அக்டோபர் 1ந் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனரும் நடிகர் தனுசுவின் தந்தையுமான கஸ்தூரிராஜா அவருடைய மனைவி விஜயலட்சுமி நடிகர் தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர்கள் அனைவரும் போடி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில்  பொங்கல் வைத்து கிடா வெட்டி விருந்து படைத்தனர்.

அப்போது கருப்பசாமி கோவிலுக்கு வருகை தந்த தனுஷ் பொதுமக்களிடம் கைகுலுக்கி அவர்களிடம் பேசி குழந்தைகளை கில்லியும் பொதுமக்களுடன் இணைந்தும் சாமி தரிசனம் செய்தார்.

 பின்னர் கிடா விருதில் கலந்து கொண்டு உணவருந்தினார்.அதனைத் தொடர்ந்து கோவில் சன்னதியில் அமைந்துள்ள மூலவர் சிலையின் முன்பு அமர்ந்து தனது  வேண்டுதல்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola