Chiranjeevi Controversy | பெண் குழந்தையே வேண்டாம் எங்க வீடு ஒரு LADIES HOSTEL சிரஞ்சீவி சர்ச்சை
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நான் ஒரு பெண்கள் விடுதி வார்டன் போல் வீட்டில் இருக்கிறேன் எனக்கு ஒரு பேரன் வேண்டும் என்று கூறி இருக்கும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது ஆண் வாரிசு மீதான வெறி என சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனாவிற்கு, கடந்த ஜூன் 2023 இல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிளின் காரா என பெயர் சூட்டப்பட்டது. மகன் ராம் சரண் தவிர, சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ரீஜாவுக்கு நவிக்ஷா மற்றும் நிவ்ரதி என்ற இரு மகள்களும், சுஷ்மிதாவிற்கு சமரா மற்றும் சம்ஹிதா என்ற இரு மகள்களும் இருப்பது இருக்கின்றனர்.
இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிரஞ்சீவி, பேசிய நடிகர் சிரஞ்சீவி பாலினம் தொடர்பாக கூறிய கருத்து பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. தனக்கு ஒரு பேரன் வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அவர் வெளிப்படுத்திய விருப்பம் தான், எதிர்பாராத திருப்பமாக மாறியது. அவரது வார்த்தைகளில் உள்ள பாலியல் ரீதியான கருத்துக்களையும், தனது சந்ததியைத் தொடர ஒரு ஆண் குழந்தை மீதான எதிர்பார்ப்பும் இருப்பதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, நான் வீட்டில் இருக்கும்போது, என் பேத்திகள் என்னைச் சுற்றி இருப்பது போல் உணர்வதில்லை. நான் ஒரு பெண்கள் விடுதி வார்டன், சுற்றிலும் பெண்கள் இருப்பது போல் உணர்கிறேன். இந்த முறையாவது ராம் சரண் ஒரு பையனைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். அப்போதுதான் நம் மரபு தொடரும், ஆனால் அவருடைய மகள் அவருடைய கண்ணின் மணி. அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறக்குமோ என்று தான் எனக்கு பயமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான ஒரு சமூக வலைதள பதிவில், "துரதிர்ஷ்டவசமாக 2025 ஆம் ஆண்டிலும் நிலவும் ஒரு பிரச்சினையை இந்தப் பதிவு எடுத்துக்காட்டுகிறது. சிரஞ்சீவியைப் போன்ற ஒருவர் காலாவதியான பாலின சார்புகளை நிலைநிறுத்துவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. ஆண் வாரிசு மீதான வெறி ஏமாற்றமளிக்கிறது மட்டுமல்லாமல், அவசர மாற்றம் தேவைப்படும் ஒரு சமூக மனநிலையின் பிரதிபலிப்பு இது" என தெரிவித்துள்ளார்.