Chinmayi on Jiiva : ஜீவா சொன்ன வார்த்தை! கடுப்பான சின்மயி! நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கவில்லை என நடிகர் ஜீவா பேசியதற்கு பாடகி சின்மயி எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார்.

மலையாள நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை தொடர்பான ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள்  ராஜினாமா செய்தனர். நடிகைகள் அடுத்தடுத்து தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை சொல்லி வருகின்றனர். மறுபக்கம் தமிழ் திரைத்துறையில் இதுபோன்றவை இல்லை என்று ஒரு தரப்பினரும், இங்கும் இதுபோன்றவை இருக்கிறது என்று ஒரு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர். 

நடிகர் ஜீவாவிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ”நல்ல விஷயத்துக்கு வந்திருக்கோம், அறிவு இருக்கா” என ஜீவா கோபப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. மேலும் தமிழ் சினிமாவில் இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கவில்லை என்றும் ஜீவா கூறியிருந்தார்.

இதற்கு பாடகி சின்மயி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர், ‘தமிழ் திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடக்கவில்லை என ஜீவா எப்படி சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. எப்படி என்று லேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமா துறையிலும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடப்பதாக பாடகி சின்மயி கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். இந்தநிலையில் ஜீவா சொல்லிய கருத்துக்கு எதிராக அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola