Bigg Boss Season 9 Contestants : அரோரா முதல் கூமாபட்டி வரை!BIGG BOSS போட்டியாளர்கள் LIST?சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 வது சீசன் வரும் அக்டோபர் 5 முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்க போகும் கண்டெஸ்டன்ஸின் லிஸ்ட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் தமிழ். கடந்த 2017ல் இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் ஒளிபரப்பானது. அந்த எபிசோடின் டைட்டில் வின்னராக ஆரவ் வெற்றி வாகை சூடினார். இதனையடுத்து 2 வது சீசனில் ரித்விகா, 3 வது சீசனில் முகன் ராவ், 4வது சீசனில் ஆரி அர்ஜுனன், 5 வது சீசனில் ராஜு, 6வது சீசனில் அசீம், 7 வது சீசனில் அர்ச்சனா 8வது சீசனில் முத்துக்குமரன் ஆகியோர் டைட்டிலை வென்றனர். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிக் பாஸ் சிசன் 9 குறித்த அப்டேட்கள் வெளியாகத் தொடங்கி உள்ளன.
கடந்த 7 சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8 வது சீசனில் விஜய் சேதுபதி பிக் பாஸ் ஆங்கராக வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். விஜய் சேதுபதி மீது கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், இந்த சீசனில் மீண்டும் அவர் ஆங்கராக தொடர்வாரா என்ற சந்தேகங்கள் எழுந்தது. கடந்த் வாரம் விஜய் சேதுபதியை வைத்து பிக் பாஸ் சீசன் 9 ப்ரோமோவை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்தது விஜய் டிவி..இதனையடுத்து அக்டோபர் 5 முதல் பிக் பாஸ் சீசன் 9 ஒளிபரப்பாக உள்ளது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் சோசியல் மீடியா பிரபலங்கள் கலைத்துறையினர் என பலதரப்பட்டோரும் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்த சீசனில் பங்கேற்கபோகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள உமைர்,சின்னத்திரை சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார், விஜே ஷோபனா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சீரியல் நடிகர் யுவன் மயில்சாமி மற்றும் புவி அரசு, கலக்கப்போவது யாரு ராஜவேலு, கூமாபட்டி தங்கபாண்டி, இன்ஸ்டா பிரபலம் அரோரா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் அவரது சம்பளம் 50 கோடியாக இருந்தது.