Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜி

தன்னை வைத்து படம் எடுப்பதாக கூறி ஏமாற்றியதாக  பிக் பாஸ் சீசன் 4-ன் ரன்னரான பாலாஜி முருகதாஸ், இந்த சீசனின் போட்டியாளரும் தயாரிப்பாளரான Fat man ரவீந்திரன் மீது பரப்பரப்பு குற்றச்சாட்டை  முன் வைத்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த  Fat man ரவீந்திரன் தற்போது பிக் பாஸ் போட்டியில் இருந்து  முதல் ஆளாக வெளியேறியுள்ளார். இதுவரை நடந்த 7 சீசன்களையும் ரிவ்யூ செய்து வந்த Fat man, அதே வேலையை தான் பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்று செய்து கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ரன்னரும் பிக் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னருமான பாலாஜி  முருகதாஸ் FAT MAN மீது பரப்பரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.  இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை வைத்து ப்டம் எடுப்பதாக கூறிய மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்  திரைப்படத்தின் முக்கால் வாசி கதையையும் அவர் சொல்லிவிட்டார். மேலும் வேறு எந்தவொரு நிறுவனங்களின் படத்திலும் நான் நடிக்கக்கூடாது, உன்னுடைய முதல் படம் என்னுடைய தயாரிப்பில் தான் என்று ஒப்பந்தத்தில் ரவீந்திரன் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.   இதனால் என்னுடைய 1.5 வருடங்கள் வீணானது. அதனால் அவருடன் இணக்கமாக இருந்ததால் நடிக்க பட வாய்ப்பு கிடைக்கும் என்று யாரும் நம்பாதீர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தற்போது Fat man ரவீந்திரன் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் பாலாஜி முருகதாஸின் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த விதமான பதிலடி கொடுக்கப்போகிறார் என்பதை நெட்டிசன்கள் ஆர்வமுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola