”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் | Shri Vishnu | Ashmitha

ஸ்ரீ விஷ்ணு மனைவி அஸ்மிதா சென்னை விருகம்பாகம் அனைத்து மகளிர் காவல் நிலையாத்தில் விஷ்ணு மீது புகாரளித்த்தையடுத்து விஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் விஷ்ணு என்னை புள்ளைதாச்சி என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கியதாக கூறி பேட்டியளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து விஷ்ணு அஸ்மித்தாவை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக விஷ்ணு என்பவர் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். நண்பர்களுடன் வார வாரம் பார்ட்டி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய நண்பரின் தங்கைக்கு இன்ஸ்டாகிராமில் மெசெஜ் செய்துள்ளார். அந்தப்பெண்ணிடம் ஆன்லைன் சாட்டில் ஆபாசமாக பேசி அவரிடம் தவறான உறவுக்கு முயன்றதாக தெரிகிறது. அந்த பெண்ணை நேரில் சந்திக்க செல்கையில் பெண்ணின்  அண்னன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து அவரை பிடித்து அடித்த நிகழ்வு சமூக வலைதளத்தில் வைரலனாது.

மேக்ஓவர் கலைஞராக இருந்து வரும் அஸ்மிதா மற்றும் அவரின் கணவர் ஸ்ரீ விஷ்ணு இருவரும் மிகவும் பிரபலமான யூடியூபர்கள். இருவரும் ஒரு ஆல்பத்தில் பணியாற்றியபோது அவர்கள் இடையில் காதல் ஏற்பட்டது.  இவர்கள் இருவரும் சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்றதாக அறிவித்த நிலையில் எங்கள் பிரிவு தான் நாங்கள் வைத்து இருந்த அன்பை புரியவைத்தது என இருவரும் மறு திருமனம் செய்துக்கொண்டனர். அவர்கள் விவாகரத்து பெற்ற போது இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது அஸ்மிதாவுக்கு இன்னொரு குழந்தையும் பிறந்துள்ளது. இப்படியான நிலையில் அஸ்மிதா விஷ்ணுவின் மீது புகாரளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்  அளித்த புகாரின் பேரில் விஷ்ணுவை கைது செய்தது போலீஸ்.  நம்பிக்கை மோசடி , பெண் வன்கொடுமை , கொல மிரட்டல் , பெண்ணை தவறாக சித்தரித்தது என 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அஸ்மிதாவுக்கு குழந்தை பிறந்த 6 நாட்களில் விஷ்ணு யூடியூப் சேனல் ஒன்றில் தனது மனைவியைப் பற்றி பல அவதூறு பரப்பும் விதமான கருத்துக்களை பேசினார். சமீபத்தில் பெண் ஒருவருக்கு ஆபாசமாக மெசேஜ் செய்து விஷ்ணு மாட்டியதைத் தொடர்ந்து தான் அவரை பிரிந்து வாழ்ந்ததால் தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் விஷ்ணு தனக்கு வேறு சில ஆண்களிடம் தொடர்பு இருப்பதாக அவதூறு பரப்பி வருவதாக அஸ்மிதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் என்னை விஷ்ணு கடுமையாக தாக்கி அடித்தாகவும் தன்னை ஒரு கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், என் குழந்தையை கொல்லும் நோக்கத்திலேயே காருக்குள்ளே அவர் என்னை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் அஸ்மித்தாவை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola