AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்

அப்பா மற்றும் அம்மாவின் விவகாரத்து குறித்து ஏ.ஆர் அமீன் தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் முப்பது ஆண்டுகளை கடப்போம் என்று நம்பினோன் இப்படி பண்ணிட்டியே சாய்ரா, என பதிவிட்டுள்ளது ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். ரஹ்மானுக்கும் அவரது மனைவிக்கும் கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ராவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூன்று தசாப்த கால திருமண வாழ்க்கையை நிறைவு செய்திருப்பார்கள். ஆனால் தற்போது ஏறக்குறைய 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 

இந்தநிலையில்  ஏ.ஆர்.ரஹ்மான் இதுக்குறித்து பதிவிட்டிருப்பதாவது.. தங்கள் விவகாரத்து குறித்து சமூக வலைதளத்தில்  ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருப்பதாவது, எங்கள் திருமண வாழ்வில் நாங்கள் முப்பது ஆண்டுகளை எட்டுவோம் என்று நம்பினோம், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்கக்கூடும். இன்னும், இந்த சிதைவில், துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைத் தேடுகிறோம். எங்கள் நண்பர்கள், இந்த பலவீனமான நேரத்தை நாங்கள் கடந்து செல்லும்போது ஆதரவாக இருக்கும் நண்பர்களுக்கும்  எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்கும் நன்றி என்று ரஹ்மான் அறிவித்துள்ளார்.

தனதுஅப்பா மற்றும் அம்மாவின் விவகாரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரஹ்மானின் மகன் ஏ.ஆர் அமீன் “இந்த கடினமான தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram