AR Rahman Divorce |‘’நானும் கணவரை பிரிகிறேன்!’’AR ரஹ்மான் GUITARIST பகீர்
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானும் அவருடைய மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக அறிவிப்பை வெளியிடுவதற்கு சில தினங்கள் முன்பு அவருடைய வழக்கறிஞர் வந்தனா ஷா பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
விவாகரத்துக்கு பெயர் போன பிரபல வழக்கறிஞர் தான் மும்பையை சேர்ந்த வந்தனா ஷா. இவர் நேற்று இரவு திடீரென கோலிவுட்டில் யாரும் எதிர்பார்த்திராத ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது தான் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி சாய்ரா பானுவின் பிரிவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
வந்தனா ஷாவின் அறிக்கையில் “திருமணமாகி பல வருடங்கள் கழிந்த பின், சாய்ராவும் அவரது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவரையொருவர் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளனர். அவர்களின் உறவில் அழுத்தம் நிறைந்திருப்பதை இந்த முடிவு காட்டுகிறது. ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், அந்த உறவில் ஏற்பட்ட பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டது. இனி அந்த இடைவெளியை குறைக்க முடியாது என்ற காரணத்தால் சாய்ரா மற்றும் அவரது ஏ.ஆர். ரஹ்மான் வேதனையான இந்த முடிவை எடுத்ததுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானின் இந்த விவாகரத்து செய்தியை அறிவிப்பதற்கு சில நாட்கள் முன், CELEBRITY-களின் வாழ்வில் ஏற்படும் பிரிவு குறித்து வழக்கறிஞர் வந்தனா ஷா பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
தீபக் ஃபரீக்கின் யூடியூப் சேனல் பாட்கேஸ்டில் பேசிய வந்தனா, “CELEBRITY-களின் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. பல நேரங்களில் அவர்களின் திருமண முறிவுக்கு துரோகம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. உண்மையான காரணம் சலிப்பு... வாழ்க்கை BORE அடித்துவிடுகிறது. திருமண வாழ்வில் இருப்பவர்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டதாக உணர்கிறார்கள். இது பாலிவுட் மற்றும் பெரும் கோடிஸ்வர குடும்பங்களில் நடைபெறுவதை மிகவும் சாதரணமாக பார்க்க முடிகிறது. ஆனால் இதை வேறு திருமணங்களில் என்னால் பார்க்க முடியவில்லை.
மேலும், "இரண்டாவது முக்கியமான விஷயம், அவர்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமான பாலியல் வாழ்க்கையை வாழ்கிறார்கள். சாதாரண திருமண வாழ்வில் இருப்பவர்களை விட இவர்கள் வாழ்வில் பாலியல் சார்ந்த எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் "மூன்றாவதாக, பாலியல் தொடர்புகள் அதிகமாக இருக்கிறது, ஒருவருடன் ஒரு நாள் இரவு மட்டும் சிலவிடும் கலாச்சாரம் ஓங்கி இருக்கிறது, இது அனைத்தையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நான் பாலிவுட்டின் ஒரு அங்கமாக அதில் பணியாற்றவில்லை, ஆனால் என்னிடம் வந்த வழக்குகளில் இருந்து என்னால் இந்த விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் பிரபலங்கள் இடையேயான விவாகரத்து அதிகரித்து வரும் நிலையில், மலைகா அரோரா-அர்பாஸ் கான், சோஹைல் கான்-சீமா சஜ்தே, ஹர்திக் பாண்டியா-நடாசா ஸ்டான்கோவிக், அமீர் கான்-கிரண் ராவ், சமந்தா -நாகா சைதன்யா , ஜெயம் ரவி-ஆர்த்தி, தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற வரிசையில் தற்போது ஏ.ஆர் ரஹ்மானின் பெயரும் சேர்ந்துள்ளது.