”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFE
தெலுங்கில் பேசுங்கள்.. தெலுங்கில் பேசுங்கள்.. என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க.. ”நான் நின்று கொண்டிருப்பது தமிழ் மண்.. அதனால் நான் தமிழில் தான் பேசுவேன்”, என்று நடிகர் அல்லு அர்ஜூன் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரோமசன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜூன் தமிழ் மொழி குறித்து பேசிய சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் கூடி இருந்த ரசிகர்களிடம் தமிழ் மொழியில் பேச ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் தெலுங்கில் பேசுங்கள்..தெலுங்கில் பேசுங்கள் என்று கோரிக்கை வைக்க.. இதனை கேட்ட அல்லு அர்ஜூன் சற்றும் யோசிக்காமல் நான் நின்று கொண்டிருப்பது தமிழ் மண்.. அதனால் நான் தமிழில் தான் பேசுவேன்”,என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். மறக்க முடியாத நாள் இது. எத்தனையோ வருஷம் இந்த நிகழ்ச்சிக்காகவும் இப்படி உங்களை சந்திப்பதற்காகவும் எதிர்பார்க்கிறேன். புஷ்பா படத்துக்காக பல இடங்களுக்குப் போனேன். ஆனால் சென்னைக்கு வரும்போது அதோட பீல் வேற. உங்க வாழ்க்கையில முதல் 20 வருடம் எப்படி இருக்கோ அப்படிதான் வாழ்க்கை முழுவதும் இருப்பீங்கனு சொல்வாங்க. அப்படி பாத்தா நான் எங்க போனாலும் சென்னை தி.நகர் காரன்தான். சின்ன வயசுல ரஜினி சார் படத்துக்கு அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கிப் பார்ப்பேன்.என் ஊர்ல என்னுடைய படத்துக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி வேணும்னு விரும்பினேன். இன்னைக்கு அது நடந்திருக்கு. நான் தமிழ்லதான் இன்னைக்கு பேசுவேன். இந்த மண்ணுக்கு நான் கொடுக்கிற மரியாதை அது.”என்று அல்லு அர்ஜூன் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது