Ajith Health Condition | அட கடவுளே AK-க்கு என்னாச்சு? மருத்துவமனை REPORT AIRPORT-ல் நடந்த சம்பவம்! | Shalini
பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவர் மருத்துவமனைக்கு சென்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நேற்று ஏப்ரல் 29 ஆம் தேதி குடியரசுத் தலைவர் கையால் பத்மபூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார். 30 ஆண்டுகளாக மேலாக நடித்து வரும் அஜித் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் ரசிகர்களையும் சம்பாதித்திருக்கிறார். அவரது திரைப்பணியை கெளரவிக்கும் விதமாக இந்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கியுள்ளது. சினிமா தவிர்த்து அஜித் குமார் சொந்தமாக ரேஸிங் அணி ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த அணியின் தலைவராக இருந்து சர்வதேச கார் பந்தையத்தில் அஜித் தற்போது கலந்துகொண்டு வருகிறார்.
அஜித் குமார் நாளை மே 1 ஆம் தேதி அஜித் தனது 54 ஆவது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இப்படியான நிலையில் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டது வழக்கமான உடல் பரிசோதனைக்கு அஜித் சென்றுள்ளதாக முதலில் தகவல் வெளியான நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
பத்மபூஷன் விருதை பெற்ற கையோடு அஜித் மற்றும் அவரது குடுமபத்தினர் சென்னை திரும்பினார்கள். அப்போது விமான நிலையத்தில் அவரைச் சுற்றி ரசிகர்கள் சூழந்துள்ளார்கள். கூட்ட நெரிசலில் சிக்கிய அஜித் குமார் காலில் சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பிசியோதெரபி பரிசோதனைக்காக அஜித் மருத்துவமனை சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சில மணி நேர சிகிச்சைக்குப் பின் அஜித் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.